கொரோனாவால் மேலும் நால்வர் பலி

கொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த யுவதி ஒருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை நிட்டம்புவவைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவரும் பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் மஹரகமவைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்