அனைவரும் இணைந்து யாழில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம்-மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல். அதேபோல் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல், வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை எவ்வாறு பேணுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்த்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

விசேடமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களை எவ்வாறு இந்த நோயிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம் அத்தோடு எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

கிராமங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட கூட்டங்களை கூட்டி கிராம மட்ட சுகாதார குழுக்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை சுகாதார நடைமுறை பின்பற்ற வைப்பதன் மூலம் இந்த தொற்றினை கட்டுப்படுத்தலாம் ஏற்கனவே இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் கிருமித்தொற்று நீக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர் முப்படையினர் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.