வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாயும் குறித்த சிறுமியும் சிதம்பரபுரம் வைத்தியசாலைக்குச் சென்று மருந்து எடுத்துவிட்டு கல்குண்ணாமடுப் பகுதியில் உள்ள அவர்களது வீடுநோக்கி சென்றுள்ளனர்.

இதன்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதிய நிலையில் சிறுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கல்குண்ணாமடுவைச் சேர்ந்த ஆகாசா ரசினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்