அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் சுற்றறிக்கை நாளை

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபனம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ,அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே ஜே. ரட்னசிரி தெரிவிக்கையில் ,அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவன மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்