ரிஷாட் மற்றும் ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் விசாரணை செய்வதற்கான தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கொழும்பு –பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முன்னதாக அனுமதி பெறப்பட்டிருந்தது.

குறித்த காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மீண்டும்90 நாட்களுக்கான தடுப்பு காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.