பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – சுதத் சமரவீர

நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பணிகளுக்குச் செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய கொவிட்-19 நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய போது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் நாளைய தினம் பொது மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படக்கூடும்.

இதன்போது பொது மக்கள் இடையே கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவர் நடமாடினால் அதில் சிக்கல் நிலைமையை தோற்றுவிக்கும்.

எனவே பொது வெளிகளுக்கு செல்வதை முடிந்தளவு மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன் இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நெஞ்சு வலி போன்ற கொவிட்-19 தொற்றுக்கு சமமான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் எந்தவொரு காரணத்திற்காகவும் பொது வெளிகளுக்குச் செல்லாது வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும்.

பின்னர் பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் போது பொது மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்