சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவரது இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயமானது அரசியல் தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை அதிகரிப்பது மாத்திரமன்றி இராணுவ தொடர்புகள் பற்றியும் அவதானம் செலுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார். இவருக்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.

இலங்கை வரும் சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்