வவுனியா நகரின் பல பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பஜார் வீதி , இலுப்பையடி சந்தி , மொத்த மரக்கறி விற்பனை மையம் , குடியிருப்பு வீதி , ஹொரவப்பொத்தானை வீதி , புதிய பேருந்து நிலையம் , கண்டி வீதி என்பவற்றில் இன்று (28) காலை 8.00 மணியளவில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதுடன் நடைபாதைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்தும் வீசப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்