இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் செயல் நூல்கள் வழங்கும் அறிமுக விழா…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகமும், அறநெறிப் பாடசாலைகளும் இணைந்து இந்து அறநெறி மாணவர்களுக்கு பிரதான பாடநூல்கள் ,துணைநூல்கள், செயல் நூல்கள் வழங்கும் அறிமுக விழாவும், நூல் கண்காட்சியும் நிகழ்வானது  வீரமுனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் திரு. எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதில் முன்னிலை அதிதியாக இந்து மதகுருமார், பிரதம அதிதியாக அம்பாறை மாட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், சிறப்பு அதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. V.T.சகாதேவராஜா, பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். பரமதயாலன், பாடசாலையின் அதிபர். திருமதி செந்தமிழ்செல்வன் சத்தியவாணி,கிராம உத்தியோகத்தர்கள், மற்றும், சகல பாடசாலைகளின் அதிபர்கள், இந்து மன்றங்கள், பெற்றோர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு பிரிவு ரீதியாக நூல்கள் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்