ஜமைக்காவிலிருந்து தபால் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 25 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

ஜமைக்காவிலிருந்து தபால் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருள் அடங்கிய இந்த பொதி, சீதுவையை தளமாகக் கொண்ட ஒரு தனியார் தபால் சேவை மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்னர் நாட்டிற்கு வந்த அந்த பொதி குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், சுங்க அதிகாரிகள் பொதியை சோதனையிட்டனர.

இதன்போதே குறித்த பொதியிலிருந்து கொக்கெய்ன் போதைப்பொருளின் தொகை மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 25 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்