நாவிதன்வெளியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், குடும்ப உறவினர்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு மேற்படி குடும்பஸ்தரை அழைத்து வந்த நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாளாந்த கூலி வேலை மற்றும் மீன் வியாபார தொழிலில் ஈடுபட்டு வரும் உயிரிழந்துள்ள நபருக்கு, 6 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்