புதிய கொவிட்-19 முகக் கவசங்களை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் ஆராய்ச்சி குழுவினரால் புதிய கொவிட்-19 சோதனைக் கருவி மற்றும் முகமூடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ச.தோ.ச. மற்றும் அரச வர்த்தக பொதுக் கழகங்கள் வழியாக இதனை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எந்தவொரு வைரஸ் அல்லது பக்டீரியாவையும் கொல்லக்கூடிய நனோ-வடிகட்டுதலை முகக் கவசம் கொண்டுள்ளதாகவும், இவற்றை குறைந்தது 25 முறை கழுவி பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் மற்றொரு சிறப்பு யாதெனில் காபனீரொட்சைட்டு நுழைய அனுமதிக்காமல் இருப்பது ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.