கொழும்பு மாவட்டத்தில் 228 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணாப்பட்ட 1,466 பேரில் 200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 104,953 ஆகவும் அதிகரித்துள்ளது .நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 228 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 94 பேர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் . குறிப்பாக 19 பேர் நாரேன்பிட்டிய, 18 பேர் பொரளை மற்றும் 17 பேர் தெமட்டகொடை பிரதேசங்களை சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.