வவுனியாவில் அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது

 

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்