கொரோனாவால் மட்டக்களப்பில் இருவர் பலி

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரு ஆண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளார் வைத்தியர் நகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வந்த 57 வயதுடைய கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

அதேவேளை கரடியனாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருகோணமலையைச் சேர்ந்த ஆண் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்