காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களுக்கு அண்டிஜன் பரிசோதனை !

நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19  மூன்றாம் அலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் முககவசம்  அணியாதவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கையை மேற்கொண்டனர் .இதில் முகக்கவசம் அணியதவர்களுக்கு எதிராக உடன் கோவிட் 19 தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்