முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

இரண்டு வாரத்தின் பின்னர் காணாமல் போனோர் விடயத்தை கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் காலை 11 மணியளவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போனோர் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் தீர்வுகள் முன்வைக்கப்படும் என அண்மையில் கூறியிருந்தீர்கள். அதன் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என வினவினார்.

அதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதில் முன்னேற்றம் உள்ளது. நேற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.

அதனை விட கொடிய நோய் ஒன்று உலகளாவிய ரீதியில் பரவியிருக்கிறது. ஆனபடியினால் நாங்கள் இருவரும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். சற்று பொறுத்து ஓரிரண்டு வாரத்தின் பின்னர் அந்த விடயத்தை கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்