திடசங்கற்பத்தை மே நாள் கொண்டாட்டத்துடன் இணைத்து எழுச்சி கொண்டு வந்திருக்கிறது-மாவை சேனாதிராசா

இலங்கை தமிழரசு கட்சி தலைவர்மாவை.சோ.சேனாதிராசா விடுத்துள்ள மே தின செய்தி..

தொழிலாளர் வர்க்கத்தின் ‘மே’ நாள் வெற்றித்திருநாள் உலகம் முழுவதும் கொண்டாட முடியவில்லை என்பது பெரும்சோகமே. 1986 ‘மே’ 1 இல் அமெரிக்காவில் சிக்காக்கோவில் தொழிலாளர்கள் எட்டுமணிநேர வேலை கோரி
முதலாழித்துவத்தின் மனித குலத்திற்கெதிரான அடிமைத்தனம்ரூபவ் அடக்குமுறைரூபவ் ஒடுக்குமுறைக்கெதிராக ஓன்றுபட்டுப் போராடி
வெற்றிபெற்ற நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது.

தொழிலாளர் வர்க்கம் 100 கோடி வரை உலகம் முழுவதும் பெரும் போராட்டங்களை உலகம் முழுவதும் அரசியல்அடிப்படையிலும்ரூபவ் நாடாளும் வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. அதேவேளை இன்று உலகநாடுகளில் தொழிலாளர்மட்டுமல்ல மனித குலமே கொரோனா வைரஸ் தொற்றுத் தீவிரத்தினால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டும் மரணமடைந்தும்பேரவலத்தில் வீழ்ந்து வருகின்றனர். பேரழிவு தொடருகின்றது. சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 100 கோடிதொழிலாளர்கள் பெற்ற உரிமைகளையும் வாழும் உரிமையையும் இழந்து கொரோனா நோய் பரவலுக்குப் பலியாகப்போகிறது என்று எச்சரித்துள்ளமையை கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் ‘மே: நாள் கொண்டாட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பெற்ற வெற்றிகளை பாதுகாத்து நிற்பதற்கும் தொழில்துறைகளில் நவீன அறிவியல் வளர்ச்சியினால்தொழில்நுட்பத்தினால் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
வளர்ச்சிகளினால் உடலுழைப்புக்கு அப்பால் அறிவியல் வளர்ச்சியுடன் புதிய தொழிலாளர் எழுச்சி கொண்டுள்ளனர்.

அத்தோடு சமூக பொருளாதார மாற்றங்களுடனும் வாழும் காலத்திலும் தம் உரிமைகளைப் பாதுகாத்து நிற்கவும் மே நாள்விழாக்கள் பேரணிகள் நாடுகளில் அரசியல் ஆட்சி மாற்றங்களையும் பல நாடுகளில் ஏற்படுத்தி வந்திருக்கின்றமையை வரலாறு கொண்டிருக்கிறது. இலங்கையிலும் தமிழ்த் தேசிய இனம் தாம் வாழும் தேசத்தில் விடுதலைக்காகவும் போராடும் திடசங்கற்பத்தை மே நாள்
கொண்டாட்டத்துடன் இணைத்து எழுச்சி கொண்டு வந்திருக்கிறது. தென்னிலங்கையில் தொழிலாள வர்க்கம் காலகதியில் இனவாத
ரீதியிலும் இடதுசாரித்துவம் கூட பிளவுபட்டு நிற்கும் நடைமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இலங்கையில்ஏற்பட்டிருப்பதையும் அனுபவிக்கின்றோம்.

21ஆம் நூற்றாண்டிலும் குறிப்பாக மலையகத் தொழிலாளவர்க்கம் இன்றும் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப்பெறுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறது. நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கைரூபவ்வாழும் உரிமையிழந்தோர்
வீடற்றோர் நிலைமைரூபவ் ஊட்டச்சத்தற்றோர் என்பதற்கப்பால் கொரோனா வைரஸ் காரணமாக வேலையிழந்து வருவோர்
பசிபட்டினியால் நோய்களினால் மரணத்தை எட்டுவோர் இலட்சக்கணக்கில் பெருகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கர்ப்பிணித்தாய்மார், குழந்தைகள் கூட புதிய திரிபுபட்ட வைரஸ் பரவலினால் பாதிக்கப்படுவது இன்னும் கொடுமை.இவ்வாறானதொரு சூழ்நிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டி விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களும் தொழிலாள வர்க்கமும் பெற்ற உரிமைகளையும் இழந்து உயிருக்குப் போராடும்
நிலையில் மே நாளைக் கொண்டாட முடியாமல் இருக்கின்ற நிலைமை இலங்கையில் மட்டுமல்லரூபவ்தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகமே சோகத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் தீவிரமடைந்து பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பெற்ற ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா
தடுப்பூசி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுவதும் ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது.
கொரோனா வைரஸ் தீவிரத்திலிருந்து விடுபட்டு உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் மற்றும்அந்தந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளையும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுரூபவ் மருந்துத் திரவத்தினால்
கைகழுவுதல் மற்றும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றிக்கொள்ளுதல் முதலானவற்றைப் பின்பற்றி நாமே நம்மைப் பாதுகாப்பதே இன்றைய தேவையாய் இருக்கிறது.

மாவை.சோ.சேனாதிராசா
தலைவர் இலங்கை தமிழரசு கட்சி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.