சகல இந்து அறநெறிப் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவித்தல்

நாட்டிலுள்ள சகல இந்து அறநெறிப் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் இந்துக் கலாசார திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகார அமைச்சரும், இந்து மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபுஷர்மா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்