மட்டக்களப்பு நகர் திசவீரசிங்கம் பகுதி முடக்கம்24 மணித்தியாலத்தில் 32 பேருக்கு கொரோனா!
மட்டக்களப்பு நகர் பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்றுதியையடுத்து திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு பகுதியிலுள்ள 3 குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலயத்தில் மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மாவட்ட செயலகத்தில் இன்று அவசர கொரோனா தடுப்பு செயலணி கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மண்முணை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திசவீரசிங்கம் சதுக்கத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளிக்கிழமை நோய் காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற போது அவருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது
இதனையடுத்து அந்தபகுதியில் நேற்று சனிக்கிழமை 24 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து அதில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
அதே வேளை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அரசாங்க சுகாதார அமைச்சு அறிவித்த சுகாதார சுற்று நிருபத்துக்கமைய சாதாரணமாக இடம்பெறும் மரணங்களின் ஈமைக்கிரியைகள் 24 மணித்தியாலத்தில் நடாத்தப்படவேண்டும் அதேவேளை மரணவீட்டில் 25 பேரும் மற்றும் ஆலயங்கள் வழிபாடுகள் 25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது றமழான் மாதம் பள்ளிவாசலில் கூட்டாக தொழ முடியாது
தனியார் வகுப்புகளுக்கு தடை, உடுப்புக் கடைகளில் மக்கள் அதிகமாக செல்வதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது எனவே அவர்களை 25 வீதமாக உள்வாங்குமாறும வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்தபகுதிக்கு காவற்துறையினர் இராணுவத்தினர் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர், பொது சுகாதார உத்தியோகத்தர் சென்று பார்வையிட்டு அந்த பகுதி வீதிகளை மூடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதியில் இருந்து உள் நுழையவே வெளியேறவே முடியாதவாறு இராணுவத்தினர் பொலிசார்; பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்



கருத்துக்களேதுமில்லை