அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதொச நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் இன்று

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதொச நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இதனைக் கொள்வனவு செய்ய முடியும். தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த காலங்களில் விநியோகித்த நிவாரணப் பொதியை விட இம்முறை மேலும் சில பொருட்கள் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சம்பா அரிசி, நாட்டரிசி என்பன தலா ஒரு கிலோ இதில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சதொச நிவாரண பொதி – 2 யில் உள்ளடங்கியுள்ள பொருட்கள்

ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி
ஒரு கிலோ கிராம் நாட்டரிசி
ஒரு கிலோ கிராம் மாவு
ஒரு கிலோ கிராம் அவுஸ்திரேலியா சிகப்பு பருப்பு
ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி
200 கிராம் நெத்தலி ( தாய்)
50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல்
முகக்கவசம் ஒன்று
100 கிராம் தேயிலை தூள்
50 கிராம் சோயா மீட் பெக்கெட் ஒன்று
100 கிராம் துண்டு மிளகாய்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்