சப்பர திருவிழாவில் கூடிய நால்வர் தனிமையில்

(எம்.றொசாந்த்)

கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை மீறி, கோவிலில் திருவிழா நடத்திய உபயக்காரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள கோவிலில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் (03) தேர்த் திருவிழா நடைபெறவிருந்த நிலையில், நேற்று (02) சப்பரத் திருவிழா நடைபெற்றது.

இந்த சப்பரத் திருவிழாவில், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அறிவுறுத்தல்களை மீறி, கோவிலில் பெருமளவானோர் கூடினர்.

அத்துடன், சுகாதார விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் உரிய முறையில் முகக் கவசங்கள் இன்றியும் சமூக இடைவெளிகளை பேணாதும் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, கோவிலுக்குச் சென்றிருந்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் கோவில் திருவிழாவை நிறுத்தி, குருக்கள், உபயக்காரர், நிர்வாகத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட நான்கு பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்