மட்டக்களப்பில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனன தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனன தின நிகழ்வுகள் இன்று (03) மட்டக்களப்பில் இரு வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.
அதனடிப்படையில்  கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமியின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் பிரதான ஜனன தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலானோர் கலந்து கொண்டனர்.
அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, “வெள்ளை நிற மல்லிகையோ” பாடல் பாடி ஜனனதின நிகழ்வுகள் சுகாதார முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டது.
அதேவேளை மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாடு செய்திருந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் நிகழ்வு சுவாமியின் உருவச் சிலை அமைந்துள்ள  நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிக்கப்பட்டு, பூக்கள் தூவி, “வெள்ளை நிற மல்லிகையோ” பாடல் பாடி ஜனனதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டதனைத்தொடர்ந்து  மாநகர சபை ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வுகளில்  மாநகர உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் ஊழியர்கலென மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
சுகாதார வழிமுறைகளை பிற்பற்றும் பொருட்டு நிகழ்வுகள் வெவ்வேறு நேரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்