70 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா!

கொவிட்-19 தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (02) வரையில், கொவிட்-19 தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு தமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருப்பார்களாயின் அவர்களுக்கு அருகில் குழந்தைகளை அனுமதிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன், சிறுவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வீடுகளில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சமுதாய சுகாதார வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியானவர், சிகிச்சை மையத்திற்கு கொண்டுசெல்லப்படாவிட்டால், பொதுமக்கள் அதுகுறித்து 1906 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்