மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக நேற்று மாலை (2) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று காலை தனது வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காக விபுலாந்தபுரம் பகுதிக்கு சென்ற மயிலம்பாவெளி பாடசாலை வீதியைச் சேர்ந்த ராமலிங்கம் பாக்கியராசா (57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் மயிலம்பாவெளி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்தாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி கறுப்பையா ஜீவராணி பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்