அம்பாறை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு வீதியில் வைத்தே அண்டிஜன் பரிசோதனை !

நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19
மூன்றாம் அலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார
பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு கல்முனை
வடக்கு கல்முனை தெற்கு நிந்தவூர் சம்மாந்துறை நாவிதன்வெளி அக்கரைப்பற்று உள்ளிட்ட
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில்
குறித்த பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும் சீராக முகக்கவசத்தை அணியாமல்
வருபவர்களையும் இடைமறித்து அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் அன்டீஜன் பரீசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைக்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பொது சுகாதார பரிசோதகர்கள்
மற்றும் பொலிசார் பாதுகாப்பு படையினர் இணைந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது
நடவடிக்கையை மேற்கொண்டனர் .இதில் முகக்கவசம் அணியதவர்களுக்கு எதிராக உடன் கோவிட் 19
தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதே வேளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட்
மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் ஆகியோரின் கண்காணிப்பில் மேற்பார்வை
பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தாரின் நெறிப்படுத்திலில் பொதுச் சுகாதார பரிசோதகர்
எம்.எம்.எம்.பைசால் தலைமையிலான குழு சாய்ந்தமருது பிரதேசத்தில் கொவிட்-19 யினை
கட்டுப்படுத்துமுகமாக பொது இடங்களுக்கு திடீர் விஜயம் இரவு 09.30 மணிவரை மேற்கொண்டனர்.

இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்
மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பட்டதாரி பயிலுநர்கள், பல்நோக்கு
அபிவிருத்தி செயலனி திணைக்களத்தின் பயிலுநர்களும் கலந்து கொண்டனர்

வெசாக் மற்றும் நோன்பு பெருநாள் பண்டிகை காலம் என்பதனால் மக்கள் புத்தாடைகள் மற்றும்
பண்டிகை கால கொள்வனவில் சாய்ந்தமருது வர்த்தக நிலையங்களில் பரபரப்பாக இயங்கிவருவதனால்
சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி
மூலம் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்