O/L , A/L பரீட்சைகள் நடத்தும் மாதங்களில் மாற்றம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, ஓகஸ்ட் மாதம் சா/த பரீட்சையையும், டிசம்பரில் உ/த பரீட்சையும் நடத்த அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பாடத்திட்டத்தை ஒரு வருடமும் 09 மாதங்களுக்கு மட்டுப்படுத்தி மறுசீரமைக்க கல்வி அமைச்சர் முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எடுக்கும் காலத்தை குறைப்பதன் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் முதல் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை