ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது இளைஞன் மரணம்!

மூதூரில் ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

ஜின்னா நகர், மூதூர் – 02 ஐ சேர்ந்த க.பொ.த சாதாரண தர மாணவன் நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இம்மாணவன் அவரது நண்பர்களுடன் ஆலிம்சேனை எனப்படும் இடத்திலுள்ள ஆற்றில் நேற்று (03) மாலை குளிக்கச் சென்றவேளை நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டு, மூதூர் வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.வை.எம்.லாபிர் தெரிவித்தார்.

மாணவனின் உடலை மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மேற்படி குளத்தில் குளிப்பதைத் தடை விதிக்க வேண்டுமென, பிரதேச சபைத் தவிசாளரிடம் வேண்டுகோளையும் மரண விசாரணை அதிகாரி முன்வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்