இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ் நாக விகாரையில் சிறப்பு வழிபாடு

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ் நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய தேசம் கொரோனா தொற்று நோயிலிருந்து மீண்டு புத்துணர்ச்சி பெறவும் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் இன்றையதினம் ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூஜையும் இடம் பெறுகின்றது

உலகத்திற்கு தர்மத்தையும் அன்பையும் அகிம்சையையும் போதித்த பாரத தேசத்தில் தற்போது எழுந்துள்ள கொரோனா நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்காக இலங்கை அரசினதும் நாட்டு மக்களின் சார்பாக இன்றைய தினம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் ரத்ன சூத்திர பாராயணமும் இந்து மத குருக்கள் தலைமையில் விசேட பூசையும் இடம் பெறுகின்றது.

குறித்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சீமான் எஸ் பாலச்சந்திரன் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இந்து பௌத்த மத குருமார் கலந்து கொண்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்