கல்முனையில் , வர்த்தக சங்க ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு பேரணி !
(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)
நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசின் சுகாதார திணைக்களம், பாதுகாப்பு படை, பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் கல்முனை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு பேரணியொன்று இன்று காலை கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம்.சித்தீகின் தலைமையில் கல்முனை நகரில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பளார் டாக்டர் ஜீ.சுகுணன், கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சுஜித் பிரியந்த, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை பொலிஸ் நிலைய கொரோனா கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹீட், கல்முனை வர்த்தக சங்க செயலாளர் எஸ்.எல். ஹமீட், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார், வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்த இந்த பேரணியின் போது சுகாதார விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு சுவரொட்டிகள், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை