வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி

வறுமையை காரணம் காட்டி கல்வியை விடாது கல்வியினை தொடந்து சாதனை நிலை நாட்டுங்கள் என தெரிவித்துள்ள வவுனியாவில் கலைப் பிரிவில் முதலிடம் பெற்ற பரமசிவம் சுபிலக்ஷி என்ற மாணவி , சட்டத்தரணியாகி தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பதே தனது இலச்சியம் என தெரிவித்துள்ளார்.

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 351வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

2019ம் ஆண்டு பரிட்சையில் தொற்றவிருந்த நான் உடன் நிலமை சுகயீனம் காரணமாக 2020ம் ஆண்டு பரிட்சைற்கு தொற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டது. எனினும் விடமுயற்சியினால் தற்போது கலைப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளேன்.  எனது எதிர்கால இலட்சியம் சட்டத்தரணியாக வேண்டும் என்பது அதன் முதற்கட்டத்தினை தற்போது தாண்டியுள்ளேன் என்பதை நினைக்கும் சமயத்தில் சந்தோசமாகவுள்ளது.

இனி பரிட்சை எழுதவுள்ள மாணவர்களும்  இலட்சியத்தினை முன்னுருத்தி கல்வியினை தொடர்ந்தால் சிறந்த பெறுபேற்றினை அடைய முடியும் . குறித்த திறமைச்சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் குடும்பத்தினர் , அதிபர் , ஆசிரியர்கள் , உறவினர்கள் , சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

எனது குடும்ப வறுமையின் மத்தியிலும் இந்த சாதனை நிலைநாட்டிய என்னை போல் எதிர்காலத்தில் பரிட்சையில் தொற்றவிருக்கும் மாணவர்களும் வறுமையினை கருத்தில் கொள்ளாது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்