மருத்துவராகி மக்களுக்கு இலவச சேவையினை வழங்வேன் : வவுனியா முதன் நிலை மாணவி தரண்யா !

மருத்துவராகி எனது பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் மக்களுக்கு இலவசமாக சேவையினை வழங்குவதே எனது இலச்சியமாகும் என வவுனியாவில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி தரண்யா சூரியகுமார் தெரிவித்தார்.

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி உயிரியல் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி தரண்யா சூரியகுமார் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 148வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் ஒர் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்  . நான் வசிக்கும் பின்தங்கிய கிராமமான தச்சங்குளம் கிராம மக்களுக்கு இலவசமாக சேவையினை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேலும் எனது கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து செல்கின்றேன்.

கோவிட் -19 காரணமாக பாடசாலை , பிரத்தியோக வகுப்புக்கள் , கற்றல் நடவடிக்கைகள் இடையில் நிறுத்தப்பட்டன இருந்த போதிலும் இணைய வசதியூடாகவும் , முன்னர் கற்றவற்றினை மீள கற்றதும் தான் நான் இந்த பெறுபேற்றினை அடைய காரணம் எனவே எதிர்வரும் பரிட்சையில் தோற்றவுள்ள மாணவர்களும் கோவிட்-19 காரணத்தினை முன்னுறுத்தி கற்றல் நடவடிக்கையினை முடிவுறுத்தாது மேலும் இணையம் , கற்றவற்றினை மீட்டல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த பேறுபேற்றினை அடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

குறித்த திறமைச்சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த குடும்பத்தினர் , அதிபர் , ஆசிரியர்கள் , உறவினர்கள் , சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்