இலங்கை கடற்படையினரால் 86 இந்திய மீனவர்கள் சிறைப்பிடிப்பு

இந்தியா – பாம்பன் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை (03) மீன் பிடிக்கச் சென்ற 11 நாட்டுப் படகுகளையும் அதில் இருந்த 86 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை மட்டும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை 30 மணி நேரத்திற்கு பின் நேற்று (04) இரவு நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசு மீன்பிடி தடை காலம் அறிவித்து உள்ளதால் மீன் பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் அதிகளவு நாட்டு படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து சுமார் 11 விசைப் படகுகளில் மீன் பிடிப்பதற்காக டாஸ்மன், பிரவீன், ராஜ், ராமு, நாகராஜ், சிம்சன், சுரேஸ், அந்தோணி, கிருஷ்ணன் உள்ளிட்ட் 86 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கடந்த திங்கள் கிழமை மதியம் நாட்டுப் படகுகளையும் அதில் இருந்து 86 மீனவர்களையும் சிறை பிடித்து நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மீனவர்களின் படகுகளை சோதனை செய்த கடற்படை வீரர்கள் படகில் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாததால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மீனவர்களை கைது செய்யாமல் 30 மணி நேரத்திற்கு பின் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

மீனவர்களின் படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்களான, ஜி.பி.எஸ், மீன்பிடி வலைகள், நங்கூரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதாக எச்சரித்தனர்.

திருப்பி அனுப்பட்ட மீனவர்கள் நேற்று (4) இரவு கரைக்கு திரும்பிய பின் பாம்பன் துறைமுகத்தில் வைத்து ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது காற்றின் வேகம் காரணமாக இலங்கை எல்லைக்குள் சென்றதாகவும் நடுக் கடலில் எங்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வெட்டி எடுத்துக் கொண்டதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.