றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது: சரத் வீரசேகர

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அழைத்துவர முடியாது என அமைச்சர் கூறினார்.

“அவ்வாறு அழைத்து வருவதன் மூலம் விசாரணைகளுக்கு தடை ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர அனுமதிக்க வேண்டாம்” என அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்