யாழில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில், காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெல்லிப்பளை காவல்துறையினரால் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதோடு, வீதியால் செல்லும் வாகனங்கள் மறிக்கப்பட்டு முகக்கவசம் அணியாதவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்