கொரோனா தொற்றுநோயை தடுக்கும் ஆயுர்வேத மூலிகை பானம் வழங்கி வைப்பு
[வி.சுகிர்தகுமார் ]
இந்த வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் முகமாக இலவச ஆயுர்வேத மூலிகை பானமானது ( ஜோசான்ட்) இன்று வழங்கி வைக்கப்பட்டது.
சுதேச ஆயுர்வேத மாகாண ஆணையாளர் வைத்தியர் ஆர்.சிறிதரின் ஆலோசனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை வைத்தியர் ஜி.சுகுணன் மற்றும் கல்முனை பிராந்திய தொடர்பாளர், வைத்தியர் எம்.எ.நபீலின்; வழிகாட்டலில் ஆலையடிவேம்பு ஆயுர்வேத மத்திய மருந்தகம் பொறுப்பதிகாரி வைத்தியர் .த.குவிதாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன்,
வைத்தியர் திருமதி ஆமிலா ஜமால்டீன் வைத்தியர் கோபிநாத் மற்றும் பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு சத்தோச முன்பாக ஆரம்பித்த நடமாடும் இச்சேவை பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை