ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் மில்கா

2021டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்.

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.