வடக்கில் கொரோனா நோயாளர்களுக்காக மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் நேற்று முதல் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2ஆம் மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக இயங்கிய இடம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஒரு விடுதி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை நேற்றிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்