யாழில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21; வடக்கில் 27

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரும் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவரும் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தனர்.

இதனால் யாழ்.மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 என்றும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்