மட்டக்களப்பு வாகன விபத்தில் இரு இளம் வயதுடையோர் உயிரிழந்த சோகம்.
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு தனியார் பஸ் உரிமையாளரும் அவருடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள். பரமேஸ்வரன் தனுயன், (வயது 31) மற்றும் வினோகா துரைசிங்கம் (வயது 31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
விபத்துக்குள்ளான இரு சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது.




கருத்துக்களேதுமில்லை