யாழில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்டநாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் காவல்துறையினர் கைது!

யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியானை உள்ள நிலையில் அவர் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது அவரது வீட்டிலிருந்து 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதோடு. கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்