வேர்ல்ட் விசன் நிறுவத்தினால் மாவட்ட செயலகத்தில் இரண்டு கிருமித்தொற்று நீக்கி விசிறி இயந்திரம் மற்றும் சுகாதார பாவணைப்பொருட்கள் கையளிப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பரவியுள்ள கொவிட் வைரசை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய அரசாங்கத்தின் உதவிகளுக்கு புறம்பாக அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்ட செயலகத்துடன் கைகோர்த்து அவசியமான உதவிகளை வழங்கி வருகின்றன.
அதன்படி வேர்ல்ட் விசன் நிறுவத்தினால் இன்று(7) மாவட்ட செயலகத்தில்  இரண்டு கிருமித்தொற்று நீக்கி விசிறி  இயந்திரம் மற்றும் சுகாதார பாவணைப்பொருட்கள் என்பன மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்ஜிடம்  கையளிக்கப்பட்டன.
குறித்த பொருட்கள் பொது இடங்கள் உட்பட ஏனைய பிரதேசங்களில் தொற்று நீக்கி செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்