கொவிட் 19 தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழப்பு !

கொவிட் 19 தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது.

01. சுனந்தபுர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய பெண் ஒருவர், குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் இரனவில கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த சிகிச்சை நிலையத்தில் 2021 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. இளவாலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. கோங்கஹவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், கோங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04. இரத்மலான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், நாட்பட்ட சிறுநீரக நோய், மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. தெஹியத்தகண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய பெண் ஒருவர், பண்டாரவெல இடைநிலை சிகிச்சை நிலையத்தில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவுடன் குருதி நஞ்சானமை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06. பதுளை மயிலகஸ்தென்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிந்துனுவௌ கொவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, மீண்டும் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட பின்னர் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவால் குருதி நஞ்சானமை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07. வாத்துவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. கொழும்பு – 03 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. ரத்தொழுகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசற மார்புச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. றாகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் மினுவங்கொட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. 68 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 05 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய், இதயநோய் மற்றும் காச நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 06 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. அலபலாதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 50 வயதுடைய ஆண் ஒருவர், ஆராச்சிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், ஆராச்சிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. அங்குலுகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 06 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. ஹிக்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று கொவிட் 19 நியூமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

17. அங்குலுகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று கொவிட் நியூமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

18. நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 05 ஆம் திகதியன்று நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

19. அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்