யாழ் கல்வியங்காடு பொதுச் சந்தைக்கு மறு அறிவித்தல் வரும் வரை பூட்டு!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் கல்வியங்காடு பொதுச் சந்தை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளது.

பொதுச் சந்தை நடவடிக்கைகள் இன்று காலை இடம்பெற்ற வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிப்பதற்காகச் சென்றிருந்தனர்.

அதன்போது சந்தையில் வியாபாரிகள் உட்பட பலர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். அத்துடன், சமூக இடைவெளியும் பேணப்படவில்லை.அதனால் எச்சரிக்கை செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கல்வியங்காடு பொதுச் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுமாறு பணித்தனர். அதனால் சந்தை மூடப்பட்டது.

VideoCapture 20210508 150215 1

 

VideoCapture 20210508 150221

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.