சம்மாந்துறை நகர் பள்ளிவாசலில் கொரோனா நீங்க விசேட துஆ பிரார்த்தனை…

(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா  நோய்த் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியும், உலகிலிருந்து கொரோனா நோய்த் தொற்றை இல்லாதொழிக்க வேண்டியும் இன்று நாடு பூராகவும் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றது,
இதற்கமைவாக சுகாதார நடைமுறைகைளைப் பின்பற்றி சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசலில் சூரத்துல் பாத்திஹா ஓதுதல், யாஸீன் ஓதுதல், விசேட துஆ பிரார்த்தனை என்பன சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.தாசீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விஷேட துஆ பிராத்தனையினை சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.ஏ.எம்.ஜாபிர் நிகழ்த்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்