கொரோணாவில் இருந்து உலக வாழ் மக்கள் விடுபட வேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட யாகம்…

(கல்லடி நிருபர்)
தற்போது உலகை உலுக்கிவரும் கொவிட் 19 தொற்றுப் பரம்பல் நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர உலக மக்களின் நன்மையும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் வேண்டி சர்வமதப் பிரார்த்தனைகள் நாடு பூராகவும் இன்று 08.05.2021 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு இடம் பெற்றது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களது எண்ணத்தில் உதித்த சிந்தனைக்கு அமைவாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக நாடு பூராகவுமுள்ள சர்வமத ஸ்தலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாகவே இவ் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதன் பிரகாரம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கையில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட மஹாம்ருத்யுஞ்ஜய யாக வழிபாட்டினை ஆலய அறங்காவலர் மற்றும் கிரியைகளை நிறைவேற்றும் சிவாசாரியார்களோடு மட்டுப்படுத்தி, விளக்கேற்றி மானசீகமாகப் பிரார்த்தனையை நிறைவேற்றுமாறு பணித்திருந்தமைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விசேட யாக பூசை இன்று கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.
அதே வேளை மாவட்டத்திலுள்ள பிரசித்திவாய்ந்த பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதஸ்தலங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்