தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய யாகம்…
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தில் நேற்று(08) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.46 மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் துன்ப துயரங்கள், நோய்கள் இன்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு ஆசிவேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது.
இவ் யாகத்ததினை சிவஸ்ரீ கஜன் குருக்கள் மற்றும் பஹவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான சுவாமி பரதன் தயாளன் ஆகியோர் இணைந்து , ஹோம கிரியைகள் ஆரம்பமாகின. மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரங்கள் உச்சாடனம் செயற்பட்டு அக்கினியில் ஆகுதிகள் சொரியப்பட்டன.
புத்தசாசன சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபையின் ஆதரவோடு நடைபெற்ற யாக பூசையில் , ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்கள், ஊடகவியலாளர்கள் என மிகவும் குறைந்தளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துக்களேதுமில்லை