மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயார் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்கவும்

(க-சரவணன்)

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0750462897 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 5 ம் திகதி கிரான் பாரதி வீதி பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரகுமார் தசாங்கி என்ற தாயார் லக்ஷகா என்ற 11 மாத குழந்தையுடன் பகல் 11 மணியளில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கிருந்து வெளியேறி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து இவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காததையடுத்து வாழைச்சேனை   பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்னர்.

எனவே குறித்த தாயார் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலே அல்லது 0750462897 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு அவரது உறவினர்கள் பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்