15 வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்- பாடசாலை ஒன்றின் ஊழியரான 24 வயது நபர் கைது!!
15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் பாடசாலை ஒன்றின் ஊழியரான 24 வயதான நபரை சந்தேகத்தின் பேரில் மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த, இம்மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நான்கு மாத கர்ப்பிணி என தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அந்த மாணவி வழங்கிய தகவலின் பேரில், பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்துக நபர் பொலிஸாரின் விசாரணைகளின் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை