பிலியந்தலை பொதுச் சந்தை தொகுதி உள்ளிட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை!

பிலியந்தலை பொதுச் சந்தை தொகுதி உள்ளிட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதுச் சந்தை மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொவிட்-19 சோதனைகளில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பேரிடம்  மேற்கொள்ளப்பட்ட எழுமாறான சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்